Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.)
காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் 28-வது சபாநாயகர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான மாநாடு நாளை தொடங்கி 16-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும்.
இதனை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நாளை நிலைக்குழு கூட்டம் ஒன்று நடைபெறும்.
இதில், அதன் உறுப்பினர்கள் கலந்து கொள்வதுடன் ஒலி, ஒலி நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதன் பின்னர், நாளை இரவு 7.30 மணியளவில் செங்கோட்டையில் அவர் விருந்தினர்களுக்கு இரவு விருந்து வழங்குவார்.
இதன் பின்னர் நாளை மறுநாள் (15-ந்தேதி) நாடாளுமன்ற இல்ல வளாகத்தில் உள்ள சம்விதான் சதனின் மைய கூட்டரங்கில், பிரதமர் மோடி இந்த மாநாட்டை முறைப்படி துவக்கி வைக்கிறார்.
இதில், காமன்வெல்த் நாடுகளின் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். இது பற்றி சபாநாயகர் பிர்லா குறிப்பிடும்போது,
நாடாளுமன்றத்தின் பகிரப்பட்ட மதிப்புகளை பற்றியும், ஜனநாயக நிர்வாகம் மற்றும் அமைப்பின் ஒத்துழைப்பு ஆகியவை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
இந்தியா தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் அதிக அளவில் உறுப்பினர்கள் பங்கேற்பர். என்றார்.
எனினும், பாகிஸ்தானில் இருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் அடுத்த மாதம் பொது தேர்தல் நடைபெறவுள்ள வங்காளதேசத்தில் தற்போது சபாநாயகர் இல்லை என்றும் பிர்லா கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM