Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.)
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆண்டுதோறும் டில்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் கொண்டாடி வருகின்றார்.
இந்த ஆண்டும் நாளை (ஜனவரி 14) தனது இல்லத்தில் எல்.முருகன் பொங்கல் கொண்டாட உள்ளார்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களை முன்னிட்டு அவரது இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
டெல்லி வாழ் தமிழர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றியதுடன், சிறுதானியங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b