Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜனவரி (ஹி.ச)
பொங்கல் பரிசு தொகப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரொக்க பணமாக ரூபாய் 3000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி கடந்த 8ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வயதானவர்கள் முதியவர்களுக்கு கைரேகை சரிவர விழாததால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
கண் கருவிழி முறையும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகம் செய்யலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ