Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக தென்காசிக்கு இன்று
(ஜனவரி 13) இரவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து தென்காசிக்கு இன்று இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06072) இயக்கப்படுகிறது.
8 தூங்கும் வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம்,
விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், கூடல்நகர், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர் கோவில்பட்டி, கடம்பூர், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் வழியாக மறுநாள் மதியம் 3 மணிக்கு தென்காசியை சென்றடையும்.
இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b