Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் எல் கே சதீஷ் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்த் மேடையில் பேசியது,
கடலூரில் மகத்தான மாநாடாக வெற்றி பெற செய்த அனைவருக்கும் தலைமை கழகத்தின் சார்பாக தலைவர் சார்பாக என்னுடைய பணிவான வணக்கங்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்..
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்ம கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளுக்கும் தமிழ்நாட்டுக்கும் இது ஒரு நல்ல பொங்கலாக அமையும்.
என்னமோ பேசினார்கள் கேப்டன் இல்லை கட்சி அவ்வளவு தான் கூட்டம் கூடாது என்று சொன்னார்கள் பேசி அத்தனை வாய்களும் அடைந்து நாங்கள் என்றைக்கும் கேப்டனுக்கும் தேமுதிகவும் அண்ணியாருக்கும் துணை நிற்கும் என்று சொல்லி வெற்றி வீரர்களாக வந்து கலந்துகொண்டார்கள்.. அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது..
தேமுதிக ஜாதி மதங்களுக்கு அப்பார் பட்டது. இந்த பொங்கல் தேமுதிக பொறுத்தவரை கேப்டன் பொங்கல்,தேமுதிக பொங்கல்.
நாளை போகி பண்டிகை அனைவருடைய கஷ்டங்கள் நீங்கி பழைய பொருட்களை எரிப்பது போன்று
இந்த பிரபஜ்ஜம் இருக்கும் வரை கேப்டன் வழியில் இருக்கும் தேமுதிக. கருடறாக கேப்டன் இருந்து வாழ்ந்து நம்மளை வழிகாட்டுவார்.
நான் ஏற்கனவே கூறியது போல் தை பிறந்தால் வழி பிறக்கும் நீங்கள் நினைக்கும் கூட்டணி மகத்தான கூட்டணி தேமுதிக அமைக்கும்.
மீண்டும் தேமுதிக சார்பில் மாவட்ட கழக செயலாளர் கூட்டம். கூட்டணி தொடர்பாக ஆலோசனை செய்த பின் அறிவிப்பு.என பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
தை பிறந்தால் வழி பிறக்கும்.
தேமுதிக மகத்தான கூட்டினியை நாட்டுக்கும் மக்களுக்கும் மகத்தான கூட்டணி நிச்சயமாக நாங்கள் அமைப்போம்.
திமுக கூட்டணியில் புதிதாக யாராவது இணைகிறார்களா ஆளுங்கட்சியே அறிவிக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கவில்லை..
தை பிறந்தால் தமிழ்நாட்டில் நிறைய மாற்றங்கள் நிகழும் அந்த மாற்றங்கள் அந்த கூட்டணியை உறுதி செய்யும்.
அந்த உறுதி செய்யப்பட்ட அந்த கூட்டணி யார் என்பதை எங்கள் மாவட்ட கழக செயலாளர்கள் மீண்டும் அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி பத்திரிகையாளர்கள் உங்களை அழைத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்..
இன்னும் நேரம் இருக்கிறது யார் யார் போட்டியிடுகிறார்கள்? எந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பதை எல்லாம் இன்னும் நாம் முடிவு செய்து கூட்டணி முடிவு செய்த பிறகு
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கோரிக்கை வைக்கிறார்கள். மாவட்ட கழக செயலாளர் கூட அந்த கோரிக்கை வைத்திருக்கிறார். ஜனவரிக்கு உள்ளாக அனைத்து வேலைகளும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நடக்கும் என்று நம்புகிறோம்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது அதில் மாற்றுக் கருத்து இல்லை.பல்வேறு படுகொலைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்த தான் வருகிறது
இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையை அரசு மறு பரிசீலனை செய்து கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
Hindusthan Samachar / GOKILA arumugam