‘ஜனநாயகன்’ திரைப்பட தணிக்கை பிரச்சினை தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம்
புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.) ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை பிரச்சினையால் வெளியாகவில்லை. இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின்
‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை பிரச்சினை தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம்


புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.)

ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை பிரச்சினையால் வெளியாகவில்லை. இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தற்போது ‘ஜனநாயகன்’ படத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (ஜனவரி 13) கூறியிருப்பதாவது,

‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடுக்க நினைப்பது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். தமிழக மக்களின் குரலை அடக்கி, நீங்கள் எப்போதும் வெல்ல முடியாது மோடி அவர்களே!” என்று பதிவிட்டுள்ளார்.

‘ஜனநாயகன்’ திரைப்பட சர்ச்சை தொடர்பாக காங்கிரஸார் குரல் கொடுத்து வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் எனப் பலரும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு ஆதரவாக பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b