13 தமிழக மீனவர்களின் சிறைக்காவல் 27-ம் தேதி வரை நீடிப்பு!
ராமநாதபுரம், 13 ஜனவரி (ஹி.ச.) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 3 தமிழக மீனவர்கள் மற்றும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் என மொத்தம் 13 பேரின் சிறைக்காவல் நீட்டிக
Fishermen


ராமநாதபுரம், 13 ஜனவரி (ஹி.ச.)

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 3 தமிழக மீனவர்கள் மற்றும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் என மொத்தம் 13 பேரின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த 13 மீனவர்கள் தொடர்பான வழக்குகள் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

வழக்கை விசாரித்த ஊர்காவற்றுறை நீதிபதி நளினி சுபாஸ்கரன், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் எதிர்வரும் 27ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்திய மீனவர்களின் கைது மற்றும் விளக்கமறியல் விவகாரம் தொடர்பாக மீனவ அமைப்புகள் மற்றும் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசு தலையிட்டு விரைவில் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN