அண்ணாவின் பெயரை வைப்பதற்கு இடமில்லை, வைக்கவேண்டிய அனைத்து இடங்களுக்கும் அண்ணாவின் பெயரை வைத்துவிட்டோம் - ஆர்.எஸ்.பாரதி
சென்னை, 13 ஜனவரி (ஹி.ச) சென்னை ஓட்டேரியில் திமுக சார்பில் நடத்தப்படும் ''திராவிட பொங்கல்'' விழாவில் சென்னை குடிநீர் வாரிய ஓட்டுநர்கள், திருநங்கைகள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது. இதில் கல
Rsbharathi


சென்னை, 13 ஜனவரி (ஹி.ச)

சென்னை ஓட்டேரியில் திமுக சார்பில் நடத்தப்படும் 'திராவிட பொங்கல்' விழாவில் சென்னை குடிநீர் வாரிய ஓட்டுநர்கள், திருநங்கைகள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி மேடையில் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பாரதி மேடையில் பேசியது,

செய்வதை சொல்லிகாட்டும் பழக்கம் திமுகவிற்கு இல்லை.இன்னும் 70 நாட்கள் தான் தேர்தலுக்கு உள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தக்கூடும் என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வருகிறது. பிப்ரவரி 28 அல்லது மார்ச் 1ல் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும்.

SIR கண்டு எல்லோரும் பயந்தார்கள், நாம் அனைவரும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டதனால் தான், திமுக போல நாங்கள் பயிற்சி எடுத்திருந்தால் பீகாரில் வெற்றிபெற்று இருப்போம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் சொல்கிறார்.

SIR கண்டு நாம் பயப்படுகிறோம் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆனால் 6 மாதத்திற்கு ஒரு முறை பொதுக்குழு நடத்தி எடப்பாடி பழனிசாமி தான் தனது கட்சிக்குள் SIR நடத்தி வருகிறார். இறந்தவர்கள் யார், கட்சியை விட்டு இடம்பெயர்ந்தவர்கள் யார்.. திமுக, நடிகர் கட்சிக்கு செல்லலாம் என்ற நிலையில் உள்ள double entry யார் என கணக்கு எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

திமுக உறுப்பினர்கள் 2.7 கோடி பேர் உள்ளனர். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியலில் 50%. நமது உறுப்பினர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் நமக்கு பதிவானால் 200 இடங்களில் திமுக வெற்றி பெறும்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி,

எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையை பேசி பழக்கம் இல்லை. அனைத்து திட்டங்களுக்கும் அண்ணாவின் பெயரை வைத்து வருகிறோம்.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மறந்தவர் எடப்பாடி பழனிசாமி. புரட்சி தமிழர் என தனக்கு பெயர் வைத்துக்கொண்டதன் மூலம் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தமிழர் இல்லை என அவரே சொல்கிறார்.

அண்ணாவின் பெயரை வைக்கவேண்டிய அனைத்து இடங்களுக்கும் வச்சாச்சு.

வைப்பதற்கு இடம் பரிந்துரைத்தால் அங்கு வைக்கிறோம். திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ