கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு சவுதியா ஏர்லைன்ஸ் பிப்ரவரி 1-ந் தேதியில் இருந்து விமான சேவை துவக்கம்
கோழிக்கோடு, 13 ஜனவரி (ஹி.ச.) சவுதி அரேபியா விமான நிறுவனமான சவுதியா ஏர்லைன்ஸ், இந்தியாவில் பெங்களூரு, மும்பை, கொச்சி, டெல்லி, ஐதராபாத், லக்னோ ஆகிய 6 நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில், 7-வது நகரமாக, கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு வி
கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு சவுதியா ஏர்லைன்ஸ் பிப்ரவரி 1-ந் தேதியில் இருந்து விமான சேவை துவக்கம்


கோழிக்கோடு, 13 ஜனவரி (ஹி.ச.)

சவுதி அரேபியா விமான நிறுவனமான சவுதியா ஏர்லைன்ஸ், இந்தியாவில் பெங்களூரு, மும்பை, கொச்சி, டெல்லி, ஐதராபாத், லக்னோ ஆகிய 6 நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.

இந்நிலையில், 7-வது நகரமாக, கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு விமான சேவையை அறிமுகப்படுத்துகிறது.

கோழிக்கோடுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதியில் இருந்து வாரத்துக்கு 4 விமானங்களை இயக்குகிறது. ரியாத் நகரில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்படும்.

இதற்கான டிக்கெட்டுகளை சவுதியா ஏர்லைன்சின் இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் முன்பதிவுகள் இப்போது தொடங்கி உள்ளன.

சவுதியா தற்போது இந்தியாவிற்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையே 58 வாராந்திர விமானங்களை இயக்குகிறது,

இது நாட்டின் ஏழு முக்கிய நகரங்களை இணைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM