Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட அறிவிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் பெ.சண்முகம், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேசியபோது,
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தோம்.
சத்துணவு ஊழியர்களையும் அதில் இணைக்க வலியுறுத்தினோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதிவித்தொகையை உயர்த்தி வழங்க கூறினோம்.
கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு 4 ஆயிரம் ரூ. என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தினோம்
தற்போது ரூ. 3651 கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கேரளா போல தனியார் இல்லாமல் , மின்வாரியம் மூலமே நடைமுறைப்படுத்த கோரினோம்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியர்களை அழைத்து பேசி சமூக தீர்வு காண முதலமைச்சரையும், துறையின் அமைச்சரையும் வலியுறுத்தினோம் என்று கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam