Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.)
சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் 50வது ஆண்டு பொன்விழா சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இந்த ஆண்டு 50-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியினை பொன்விழா கொண்டாட்ட பொருட்காட்சியாக நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து.
அரசுத்துறை அரங்கங்கள் அமைக்க ரூபாய்.1.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சுற்றுலாத்துறை, காவல்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கல்வித்துறை, நான் முதல்வன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை, நீர்வளத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நெடுஞ்சாலைகள் துறை, கூட்டுறவுத்துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, வருவாய்த்துறை, தொழிலாளர் நலன் மற்றும் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை, குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்
துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சிறுசேமிப்புத்துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு, ஆவின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 41 மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அரங்குகள், இரண்டு மத்திய அரசின் அரங்குகள் (சென்னை துறைமுகம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்ரேசன்) உள்பட 43 அரங்குகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்காட்சியில் 80 சிறிய கடைகள் மற்றும் 14 தனியார் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சிறுவர் மற்றும் பெரியவர்கள் விளையாடும் விளையாட்டு சாதனங்கள் (Giant wheel, Octopus, Sunami, Chapsuel, Tora Tora, Swing Chair, Techno Jump, Screen Tower, and China Salambo) அமைக்கப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சியில் அதிரவைக்கும் பேய் வீடு, பனிக்கட்டி உலகம், 3டி ஷோ, பறவைகள் கண்காட்சி, வாட்டர் ரோல், கார்னிவல் விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு
சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
பொருட்காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக
பெரியர்களுக்கு
நபர் ஒருவருக்கு
40ரூபாய் எனவும்
சிறுவர்களுக்கு (4வயது முதல் 10 வயது வரை)25ரூபாய்
பள்ளி கல்லூரி மாணவ,
மாணவியர்களுக்கு 25ரூபாய் (சலுகைக் கட்டணம்)
பொருட்காட்சி நடைபெறும் நேரத்தினை பொறுத்தவரை
திங்கள் முதல் வெள்ளி வரை
(வார நாட்களில்) மாலை 3 மணி முதல்
இரவு 10 மணி வரையிலும்
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில்
காலை 11 மணி முதல்
இரவு 10 மணி வரையிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பொருட்காட்சி நுழைவுச்சீட்டினை வரிசையில் நின்று வாங்க முடியாதவர்களுக்கு வசதியாக டிஜிட்டல் தொழில்நுட்பம் QR Code Scanning with UPI Payment Methods மூலம் எளிதில் நுழைவுச்சீட்டினை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், www.ttdcfair.com என்ற இணையதளம் நுழைவுச்சீட்டினை பெறலாம். வழியாகவும்
பொருட்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காக சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள், தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஓய்வறை வசதிகள், வாகன நிறுத்துமிடம், காவல்துறை உதவிமையம், தீயணைப்பு வசதி மற்றும் சுற்றுலா உதவி மையம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொருட்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காக சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 70 நாட்கள் வரை நடைபெறும்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் பி கே சேகர்பாபு கூறியது,
ஐம்பதாம் ஆண்டு பொன் விழா காணுகின்ற சுற்றுலா துறை நிகழ்ச்சி
தமிழகத்தினுடைய திராவிட ஆட்சியில் தமிழகத்தின் தொண்டு தொட்டிய பெருமைகளை காக்குவதற்கு அது நாவலர் முதல் பேராசிரியர் அன்பழகன் வரை வாழும் கலைஞர் வரை நூற்றாண்டு கொண்டாடிய ஒரு இயக்கம் உண்டு என்றால் அது திமுக தான்.
அந்த வகையில் பொன்விழா ஆண்டாக இந்த ஆண்டும் திராவிட மாடல் ஆட்சி நாயகன்.
51 ஆம் ஆண்டு சுற்றுலா பொருட்காட்சியை அருகிலே கட்டப்பட்டு வருகின்ற பிரமாண்ட கட்டிடத்தில் சுற்றுலா பொருட்காட்சி நடைபெறும் அப்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரண்டாவது முறையாக அரியணையில் அமர்ந்து தொடங்கி வைப்பார்.
43 அரங்குகள் அமைய உள்ளது 70 நாட்களுக்கு மேற்பட்ட நாட்கள் நடைபெற உள்ள பொருட்காட்சி.
இந்த சுற்றுலா கண்காட்சி எந்த நோக்கத்திற்காக நடைபெறுகிறதோ அந்த நோக்கம் வெற்றி பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
பின்னர் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன்,
இந்த சுற்றுலா பொருட்காட்சி என்பது 1974 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தொடங்கியது கருணாநிதியை பொருத்தவரை அவர் தொடங்கிய எந்த திட்டமாக இருந்தாலும் தொலைநோக்கு பார்வையுடன் தொடங்கப்பட்ட திட்டங்கள் தான் என்பதை நாம் அனைவருமே நன்றாக அறிவோம்.
சுற்றுலா துறையின் செயலாளர் இங்கே பேசும் போது எடுத்துச் சொன்னதைப்போல அரசு திட்டங்களை மக்கள் அறிந்து கொள்வதற்கு அரசு திட்டங்களை பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக இந்த சுற்றுலா தொழில் சுற்றுலா மையத்தில் அமைக்கப்பட்டு இருக்கிற அரங்குகள் உதவியாக இருந்து கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சியின் மேயராக நான் பொறுப்பு வகித்த சமயத்தில் இங்கே அமைத்த சென்னை மாநகராட்சிக்கான அரங்கில் தினந்தோறும் இந்த கட்டிடங்களுக்கான வரைபடம் அனுமதி என்பது இங்கேயே வழங்கப்பட்டு வந்தது.
அதேபோல் குழந்தை பிறப்பு இறப்பு அதற்கான சான்றிதழ்கள் இங்கேயோ பதிவிறக்கம் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிற அந்த நிலையும் ஏற்படுத்தப்பட்டது சென்னை மாநகர மக்கள் எந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமோ அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு எதுவாக இருந்தாலும் ஒரு நிகழ்ச்சியாக அன்றைக்கு தொடங்கியது.
அதேபோலதான் இன்றைக்கும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சுற்றுலா துறை சார்பில் தொழில் முனைவோர்கள் மாநாடு என்று நடத்தப்படும் அந்த மாநாட்டில் மிகப்பெரிய அளவிலான முதலீடுகள் இருப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற ஒரு மிகச் சிறப்பான செய்தியை சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு தொழில் முனைவோர் ஏறத்தாழ இந்த ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இன்றைக்கு முதலீடுகள் எடுக்கப்பட்டு தொழில் முதலீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது அந்த வகையில் இன்றைக்கு சுற்றுலா துறையும் அதற்கான முன்னெடுப்புகளை அமைச்சர் ராஜேந்திரன் எடுத்திருப்பது என்பது பாராட்டுக்குரிய ஒன்று எனவே அந்த வகையில் இந்த சுற்றுலாத் துறையில் 50ஆவது பெண் விழாவில் எங்களைப் போன்றவர்கள் கலந்து கொள்வது என்பது எங்களுக்கு கிடைத்திருக்கிற அரும்பெரும் வாய்ப்புகளில் ஒன்று என்று மகிழ்ச்சி.
அமைச்சர் இராஜேந்திரன் பேசியபோது,
எல்லோருக்கும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு
சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில்300 புதிய சுற்றுலாத்தளங்களை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்துவதற்கு குழு அமைத்துக்கொடுத்துள்ளார்கள்
இப்பொருட்காட்சியின் மூலம் 6000பேருக்கும் மறைமுகமாக 30ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் இந்த 5 ஆண்டுகளில் 640 கோடி இத்துறைக்காக ஒதுக்கியுள்ளார்கள்.
பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்வதற்கு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஊக்கமளிக்கிறார்கள்.
இந்தியாவிலேயே சுற்றுலாவில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு தான் ஏறத்தாழ 33கோடி பேர் கடந்த ஆண்டில் சுற்றுலா வந்துள்ளார்கள்...
ஏற்காடு ரோப்கார், முட்டுகாடு மிதக்கும் உணவகம் என பல்வேறு திட்டங்கள்.
இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சியினை தமிழ்நாடு அடைந்துள்ளது.
மருத்துவச்சுற்றுலாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு விளங்கிறது பல்வேறு நாடுகளிலிருந்து மருத்துவச்சுற்றுலாவிற்காக வருகிறார்கள்.
70 நாட்கள் இந்த சுற்றுலாபொருட்காட்சி நடைபெறுகிறது. சென்னை மக்கள் அனைவரும் இப்பொருட்காட்சியினை கண்டுகளிக்க வேண்டும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் அறிந்துக்கொள்ள வேண்டும்.தமிழ்நாடு சுற்றுலாத்துறை இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ