Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஜனவரி (ஹி.ச.)
உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா உட்பட வட மாநிலங்கள் முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான குளிர் அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
அதன்படி டெல்லியில் கடுமையான குளிர்ச்சி நிலவுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று
(ஜனவரி 12) 3 டிகிரியாக பதிவாகி இருந்த நிலையில் இன்று (ஜனவரி 13) காலை 4 டிகிரி என்ற அளவில் உள்ளது.
ஆயாநகர் பகுதியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 2.9 டிகிரியாக பதிவாகி இருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கடந்த ஞாயிறன்று இரவில் பல்வேறு இடங்களிலும் குளிர் அலை பரவியது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டது.
பாலம் நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரியாக பதிவாகியது. சப்தர்ஜங் நகரில் 4.8 டிகிரியாக பதிவாகி இருந்தது. அது இன்றிரவு 3 டிகிரியாக இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது. இதேபோன்று ரிட்ஜ் ஸ்டேசன் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.7 டிகிரியாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18.8 டிகிரியாகவும் இருந்தது.
டெல்லியில் காற்றின் தரமும் கூட மோசமடைந்து உள்ளது. இதன்படி, ஒட்டுமொத்த அளவில் டெல்லியில் காற்று தர குறியீடு 337 ஆக உள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், பிஹார் மற்றும் ம.பி.யின் சில பகுதிகளில் மக்கள் குளிரில்
நடுங்கிக்கொண்டுள்ளனர். இமாச்சல பிரதேசம் மற்றும்
உத்தராகண்டிலும் கடுமையான குளிர் நிலவுகிறது.
சில இடங்களில் உறைபனியும் காணப்படுகிறது. உறை
பனியுடன் கூடிய கடும் குளிர் காரணமாக வட மாநிலங்களின் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b