Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 13 ஜனவரி (ஹி.ச.)
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்பு விற்பனை களைகட்டியுள்ளது. இதனை உள்ளூர் மட்டுமின்றி கேரள மாநில பகுதிக்கே விற்பனைக்காக அதிகளவில் அனுப்படுகிறது.
சரஸ்வதி பூஜை, சித்திரை முதல் தேதி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் மற்றும் கேரளாவில் நடக்கும் சூராம்பூர் திருவிழாவின்போதும் செங்கரும்பு வரத்து என்பது அதிகமாக இருக்கும்.
இந்த ஆண்டில் வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் கரும்பு வரத்து அதிகமாக உள்ளது. திருச்சி, நத்தம், சுப்பராயபட்டி, சேலம், பாலக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் இருந்து லாரிகள் மூலம் செங்கரும்பு கொண்டு வரப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மழை குறைவால் கரும்பு சாகுபடி சற்று குறைந்தது. அதன் பின்னர், அடுத்தடுத்து பருவமழையால் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இருந்து முதல் கரும்பு சாகுபடி அதிகமாகவே இருந்தது.
இந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு அறுவடை அதிகமாக இருந்திருந்தாலும், லாரி வாடகை, கூலித்தொகை அதிகரிப்பு என்பதன் காரணமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த பொங்கல் பண்டிகையின்போது 15 எண்ணம் கொண்ட ஒரு கட்டு கரும்பு அதிகபட்சமாக அதிகபட்சமாக ரூ.430 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு ஜோடி கரும்பு ரூ.80 வரையிலும். 15 எண்ணம் கொண்ட ஒரு கட்டு ரூ.400 முதல் ரூ.500 வரை என தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகை என்பதால் பெரும்பாலும் உள்ளூர் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வியாபாரிகளே அதிகம் வாங்கி செல்கின்றனர்.அதுபோல, பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு, பொங்கல் பண்டிகையின்போது பயன்படுத்தப்படும் மஞ்சள் கொத்தும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில், மஞ்சள் கொத்து வரத்து சற்று அதிகமாக இருந்தாலும், விலை குறையவில்லை என்றும், 10 எண்ணம் கொண்ட ஒரு கட்டு மஞ்சள் செடி ரூ.250 வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக, வியாபாரிகள் கூறுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b