அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வின் ஹால்டிக்கெட் வெளியீடு
புதுடெல்லி, 14 ஜனவரி (ஹி.ச.) தேசியத் தற்காப்புத் துறையில் (National Defence) சேர விரும்பும் மாணவர்களின் முதல் படிக்கட்டுகளில் ஒன்றான சனிக் பள்ளிகளில் (Sainik Schools) சேர்வதற்கு அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வினை தேசிய தேர்வு முகாமை
அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வின்  ஹால்டிக்கெட் வெளியீடு


புதுடெல்லி, 14 ஜனவரி (ஹி.ச.)

தேசியத் தற்காப்புத் துறையில் (National Defence) சேர விரும்பும் மாணவர்களின் முதல் படிக்கட்டுகளில் ஒன்றான சனிக் பள்ளிகளில் (Sainik Schools) சேர்வதற்கு அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வினை தேசிய தேர்வு முகாமை நடத்தி வருகின்றது.

நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், மேலும் 69 புதிய சைனிக் பள்ளிகளுக்கு 6ஆம் வகுப்பிலும், 19 புதிய சைனிக் பள்ளிகளுக்கு 9ஆம் வகுப்பிலும் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

சைனிக் பள்ளிகளில் பயில தேசிய நுழைவுத் தேர்வு 18ம் தேதி நடைபெறுகிறது. இணையதள விண்ணப்பப் பதிவுக்கு கடந்த அக்டோபர் 10 முதல் நவம்பர் 9ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

https://exams.nta.nic.in/sainik-school-society/ என்ற இணையதளம் வழியாக ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகாமை அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b