Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 14 ஜனவரி (ஹி.ச.)
மார்கழி மாதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 29 நாட்களாக சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை சேவை நடைபெற்றது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுர பாராயணம் நடைபெற்றது. ஆண்டாள் எழுதிய 30 பாசுரங்களில் தினம் ஒரு பாசுரம் என இன்று
(ஜனவரி 14ம் தேதி) வரை ஏழுமலையான் சன்னதி முன்பு பாராயணம் செய்யப்பட்டது.
இந்தியா முழுவதும் 233 மையங்களில் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆந்திராவில் 76 மையங்களிலும், தெலுங்கானாவில் 57 மையங்களிலும், தமிழ்நாட்டில் 73 மையங்களிலும், கர்நாடகாவில் 21 மையங்களிலும், பாண்டிச்சேரியில் 4 மையங்களிலும், புதுதில்லியில் 4 மையங்களிலும், ஒடிசாவில்
தலா ஒரு மையத்திலும் திருப்பாவை சொற்பொழிவு நடத்தப்பட்டது.
திருப்பதி கே.டி.சாலையில் உள்ள அன்னமாச்சார்யா காலமந்திரம் மற்றும் வரதராஜ சுவாமி கோவிலில் திருப்பாவை சொற்பொழிவு பாராயணம் நடைபெற்றது. கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான இன்றுடன் நிறைவு பெற்றன.
மார்கழி மாத நிறைவு விழாவையொட்டி, திருப்பதி அன்னமாச்சார்யா கலாமந்திரத்தில் இன்று சுவாமி-ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடை பெற்றது.
இதையொட்டி ஆண்டாள் (கோதை) மற்றும் ரங்கநாத சுவாமி உற்சவர்கள் மேடையில் எழுந்தருளினர். பின்னர், வேத மந்திரங்கள் முழங்க, அன்னமாச்சார்யா திட்டக் கலைஞர்களின் குரல் இசைக்கு மத்தியில் திருக்கல்யாணம் நடை பெற்றது.
Hindusthan Samachar / vidya.b