Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தலுக்காக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அ.தி.மு.க. -பா.ஜ.க. -பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் புதிய கட்சிகளை சேர்த்து, கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க.மேலிடத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களை உற்சாகப்படுத்த, பிரதமர் மோடி, வரும் 23ம் தேதி சென்னை வருகிறார்.
அவர்,பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இக்கூட்டத்தில், அ.தி.மு.க, பொதுச்செயலர் பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் மேடை ஏற உள்ளனர்.
பொதுக்கூட்டம் நடத்த, மாமல்லபுரம் அருகே இரண்டு இடங்களும், செங்கல்பட்டில் ஒரு இடமும், பா.ஜ.க. நிர்வாகிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றிலிருந்து ஓரிடம் தேர்வு செய்யப்படும் என பா.ஜ.க.வினர் கூறினர்.
Hindusthan Samachar / JANAKI RAM