கோவை - தன்பாத் இடையேயான சிறப்பு ரெயில் ரத்து - ரெயில்வே அறிவிப்பு
சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.) ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கோவை இயக்கப்படும் சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து வ
கோவை - தன்பாத் இடையேயான சிறப்பு ரெயில் ரத்து - ரெயில்வே அறிவிப்பு


சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.)

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கோவை இயக்கப்படும் சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து வரும் 17-ந் தேதி மாலை 4.10 மணிக்கு கோவைக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயிலும் (வண்டி எண் 03679), கோவையில் இருந்து தன்பாத்திற்கு வரும் 20-ந் தேதி காலை 7.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயிலும் (03680) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய கிழக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b