குற்றாலம் மெயின் அருவியில் சீரான நீர் வரத்து - குளிக்க அனுமதி
தென்காசி, 14 ஜனவரி (ஹி.ச.) தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக குற்றால அருவிகளில் சற்று தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றைய
Courtallam Aiyappa


தென்காசி, 14 ஜனவரி (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக குற்றால அருவிகளில் சற்று தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றைய தினம் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடையானது விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து சீராகி உள்ள நிலையில், மீண்டும் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட 4 அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பழைய குற்றாலம் அருவியில் மட்டும் இதுவரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN