முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 20-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - திமுக அறிவிப்பு
சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.) திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 20-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  - திமுக அறிவிப்பு


சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.)

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 20-01-2026 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில்” நடைபெறும்.

அப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டத்திற்கான பொருள்: 2026 சட்டப்பேரவைத் தேர்தல்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b