Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 14 ஜனவரி (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதின மடத்தின 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தியில் தெற்கு நோக்கிய பயணத்தை முடித்துக் கொண்டு சூரியன் வடக்கு நோக்கி திரும்பும் உத்திராயணம் தை மாதம் ஆரம்பமாகிறது.
இந்த காலத்தில் பயிர்கள் எல்லாம் அறுவடை செய்யப்பட்டு உலகம் செழித்தோங்குகிறது.
உழவுக்கு உரிய திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் சூரியன் உழவுக்கு உதவி செய்யும் மாடுகள் மற்றும் முன்னோர்களுக்கு மூத்தோர்களுக்கு மரியாதை செய்யும் மூன்று தினங்கள் தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
செங்கோலை விட ஏர் உழவு சிறந்தது என்று தெரிவிக்கும் இந்த நன்னாளில், பால் பொங்குவது போல் உலகத் தமிழர்கள் இல்லங்களில் மகிழ்ச்சி செல்வம் பொங்கட்டும், உலகத்தில் இயற்கை சீற்றங்கள் தணிந்து நோய்கள் நீங்கி எல்லா வளமும் நலமும் பெருக சொக்கநாதர் திருவுருளை பிரார்த்திக்கிறேன் என்று ஆதீன குருமகா சன்னிதானம் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN