பேரறிஞர் அண்ணா  விருது பெற்றிருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - அமைச்சர் துரை முருகன்
வேலூர், 14 ஜனவரி (ஹி.ச.) வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மாவட்ட ஆட்சியர
துரை முருகன்


வேலூர், 14 ஜனவரி (ஹி.ச.)

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் காட்பாடி

சட்டமன்ற உறுப்பினரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மாவட்ட

ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் சிலம்பம் சுற்றினார்.

மேடையில் வண்டறந்தாங்கல் ஊராட்சியின் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் என்பவர் பேசுகையில்,

அதிமுக ஊராட்சி மன்ற தலைவராக இருந்தாலும் அமைச்சர்

மக்களுக்கு தேவையானதை செய்கிறார்.

எங்கள் ஊராட்சியில் பொங்கல் விழா நடத்த

தேர்வு செய்தமைக்கு நன்றி. மேலும் இந்த ஆண்டு எருதுவிடும் விழா நேரத்தை இரண்டு

மணி நேரம் நீட்டித்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில்,

தங்களுக்கு பேரறிஞர் அண்ணா விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து கேட்டதற்கு,

என் வாழ்நாளில் எத்தனையோ விருது பெற்றிருந்தாலும் இன்றைக்கு பேரறிஞர் அண்ணா விருது பெற்றிருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

காரணம் அண்ணா விருது அந்த பெயரை தாங்கியிருக்கிறது.

ஆகையால் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

நான் கல்லூரி படிக்கும் போதே இளம் வயதிலேயே இயக்கத்தில் இணைத்துக்கொண்டு பணியாற்றியவன். அப்போதே கூட்டத்தில் பேசும் வாய்ப்பை எனக்கு அண்ணா அளித்தார்.

சட்டக்கல்லூரி பயிலும் போது அவரோடு

நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அப்போதே எனக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்தவர் ஆகவே அவரது பெயரிலே எனக்கு விருது அறிவித்தது

மகிழ்ச்சி, பாராட்டத்தக்கது, போற்றுதலுக்குரியது என நீர்வளத்துறை அமைச்சர்

துரைமுருகன் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam