Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜனவரி (ஹி.ச)
தியாகராயர் நகரில் அமைந்துள்ள முன்னாள் திமுக எம்.பி ஜெயதுரையின் மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்களை மிரட்டி கார் கண்ணாடியை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரை உடைத்த அதிமுக பகுதி செயலாளரும், சகோதரருமான சிவசாமி வேலுமணி உட்பட 30க்கும் மேற்பட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சொத்து பிரச்சனை காரணமாக சகோதரர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை நிலவி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக முன்னாள் எம்பி ஜெயதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.
புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் திமுக எம்பி ஜெயதுரை,
தி நகரில் ஹபிபுல்லா சாலையில் உள்ள எனது மருத்துவமனைக்குள் 30-க்கும் மேற்பட்ட கும்பல் அதிமுக பகுதி செயலாளரும், தனது சகோதரருமான சிவசாமி வேலுமணியுடன் உள்ளே வந்து, அங்குள்ள ஊழியர்களிடம் உங்களது ஓனரை தாக்கிவிடுவோம், காரை எரித்துவிடுவோம் என மிரட்டிவிட்டு காரை உடைத்துவிட்டு சென்றுள்ளனர், இவை அனைத்தும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி அவர்கள் நின்ற போது, எங்களது கட்சிக்கு வேலை பார்த்து சிவசாமி வேலுமணியை டெபாசிட் இழக்க வைத்ததால், ஆத்திரத்தில் இப்படி செய்கிறார்.
கஞ்சா, போதையில் குண்டர்களுடன் வந்து மிரட்டி உள்ளனர்..
நேற்று காவல் நிலையத்தில் ஐந்து பேரை பிடித்து வைத்திருந்த நிலையில், வழக்குபதிவு செய்தவுடன் ஐந்து பேரையும் விசாரித்து விடுவித்துள்ளனர்.
காவல் நிலையத்தில் அதிகளவு லஞ்சம் பெற்று இருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது.
தமிழக காவல்துறையை நான் மதிக்கிறேன், ஆனால் இந்த சம்பவம் சந்தேகம் எழுகிறது.
அரசியல் காரணத்திற்காக தான் இந்த செயலில் சகோதரரும், அதிமுக நிர்வாகியுமான சிவசாமி வேலுமணி செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
ஊரில் ஒரு சொத்து பிரச்சனையும் உள்ளது.
குண்டர்களை கைது செய்து ஒழித்தால் மட்டுமே வளமான தமிழகத்தை உருவாக்க முடியும்..
இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ