இலங்கைக்கு தப்ப முயன்ற தங்க கடத்தல்காரர்களை கைது செய்த கியூ பிரிவு போலீசார்
ராமநாதபுரம், 14 ஜனவரி (ஹி.ச.) இலங்கையை சேர்ந்த முகமது ரியாஸ் ,முகமது ஜாஸில் ஆகியோர், கடந்த ஆகஸ்ட் மாதம் துபாயிலிருந்து விமான மூலம் சென்னை வந்த போது சுங்கத்துறையினரின் சோதனையில் 2.5 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக பிடிபட்டு வழக்கு பதிவு செய்து, சென்னை ப
Prison


ராமநாதபுரம், 14 ஜனவரி (ஹி.ச.)

இலங்கையை சேர்ந்த முகமது ரியாஸ் ,முகமது ஜாஸில் ஆகியோர், கடந்த ஆகஸ்ட் மாதம் துபாயிலிருந்து விமான மூலம் சென்னை வந்த போது சுங்கத்துறையினரின் சோதனையில் 2.5 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக பிடிபட்டு வழக்கு பதிவு செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்திருந்தனர்.

இந்த இருவரும் ஜாமினில் வெளிவந்த நிலையில் சட்ட விரோதமாக இலங்கைக்குச் செல்ல முடிவெடுத்து, ராமேஸ்வரத்தில் இருந்து படகுமூலம் இலங்கைக்கு தப்ப முயன்ற போது, இதுகுறித்து தகவல் கிடைத்த கியூ பிரிவு போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து இன்று அதிகாலை ராமேஸ்வரம் கடற்கரையில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் கியூ பிரிவு போலீசார் ராமேஸ்வரம் கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படகு மூலம் இலங்கைக்கு தப்ப முயன்ற பிரபல தங்க கடத்தல்காரர்கள் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN