இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி
மும்பை, 14 ஜனவரி (ஹி.ச.) நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி


மும்பை, 14 ஜனவரி (ஹி.ச.)

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு காட்டும்.

அதே நேரத்தில் இந்த போட்டியில் வென்று தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் நியூசிலாந்து விளையாடும்.

Hindusthan Samachar / JANAKI RAM