Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 14 ஜனவரி (ஹி.ச.)
மஹாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் 2026, ஜனவரி 15 அன்று நடைபெறவுள்ளன.
ஜனவரி 16 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் 12 ஜில்லா பரிஷத்துகள் மற்றும் 125 பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் கால அட்டவணை:
வேட்புமனுத் தாக்கல் - ஜனவரி 16 முதல் ஜனவரி 21, வரை.
வேட்புமனு பரிசீலனை - ஜனவரி 22,
மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் - ஜனவரி 27, மதியம் 3:00 மணி வரை.
ஓட்டுப்பதிவு நாள் - பிப்ரவரி 5, 2026 காலை 7:30 முதல் மாலை 5:30 வரை.
ஓட்டு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் - பிப்ரவரி 7, 2026.
Hindusthan Samachar / JANAKI RAM