Enter your Email Address to subscribe to our newsletters

டெல்ல, 14 ஜனவரி (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்கள் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என தமது வாழ்த்து அறிக்கையை இவ்வாறு அவர் தொடங்கியுள்ளார்.
மனித உழைப்புக்கும் இயற்கையின் இசைவுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பை இப்பண்டிகை நினைவூட்டுவதாகக் குறிப்பிட்ட மோடி, வேளாண்மைத் தொழிலில் கடினமாக உழைக்கும் விவசாயிகளையும், கிராமப்புற வாழ்க்கை முறையையும், கண்ணியமான வேலையையும் இந்தத் திருநாள் கொண்டாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர் ஒன்றிணைந்து பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் தலைமுறைகளைக் கடந்து உறவுகள் வலுப்பெறுவதாகவும், ஒற்றுமை உணர்வு மேலோங்குவதாகவும் கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகை வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாகத் திகழ்வதாகவும், உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா விளங்குவதில் பெருமிதம் கொள்வதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இப்பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, மீண்டும் உங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தைத் திருநாள் அனைவரின் வாழ்விலும் அபரிமிதமான செழிப்பு, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும் என்று மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam