Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஜனவரி (ஹி.ச)
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே 3 அம்ரித் பாரத் இரயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நமது மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே 3 அம்ரித் பாரத் இரயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ள நமது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கும், நமது மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நியூ ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - சந்திரகாச்சி, நாகர்கோவில் - நியூ ஜல்பாய்குரி உள்ளிட்ட பகுதிகளின் வழியாகச் செல்லும் இந்த அம்ரித் பாரத் ரயில்கள் கூடிய விரைவில் துவங்க விருப்பதாகவும், இதன் மூலம் பயணிகளின் பயணநேரம் குறைக்கப்படுவதோடு மலிவான விலையில் தரமான சேவை மக்களுக்குக் கிடைக்கும் எனவும் வெளியாகியுள்ள தகவல்கள், தமிழகத்திற்கான தித்திப்பான பொங்கல் பரிசு என்பதில் துளியும் ஐயமில்லை என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ