Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 14 ஜனவரி (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை பூக்கள் சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது.
இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பூக்களுக்குகென தரமும் தனி மகத்துவமும் உள்ளதால் நகர் பகுதியிலுள்ள பிரசித்திபெற்ற பூ மார்க்கெட்டில் வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்ட விவசாயிகள் அதிகமாக வருவது வழக்கம்.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பூ மார்கெட்டில், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி பெய்துவந்த தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, பூக்களின் உற்பத்தி மற்றும் வரத்து மிகவும் குறைந்து, கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ, இன்று 9,000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
தொடர்ந்து 5 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் இருப்பதால்
அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
முல்லைப்பூ- ரூ.2000, ஜாதிப் பூ ரூ.1500, செண்டுமல்லி- ரூ.300,
அரளி- ரூ.200, காக்கரட்டான் ரூ.1000, சம்பங்கி- ரூ.300, ரோஜா- ரூ.300 என அனைத்து பூக்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்து விற்பனையாகி வருவதால், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.
மேலும் தொடர்ந்து நிலக்கோட்டை பூமார்கெட்டில் வெளியூர் மற்றும் சில்லறை வியாபாரிகள் குவிந்து வருவதால் பூக்களின் விலை மேலும் உயரும் என கூறப்படுவால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN