Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 14 ஜனவரி (ஹி.ச.)
பாஜக-வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இருந்து வருகிறார். இவரது பதிவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் மாற்று தலைவர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது.
பீகார் மாநிலத்தில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபி கடந்த ஆண்டு பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். இல்லை என்றால், பாஜக தலைமையகத்தில் தேர்தல் நடைபெறும்.
நிதின் நபி (வயது 45), மறைந்த முன்னாள் பாஜக தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நபின் கிஷோர் பிரசாத் சின்ஹா மகன் ஆவார்.
நிதின் நபின், சித்தாந்த ரீதியாக ஆழமான வேரூன்றியவரும், அமைப்புக்கு முழுமையாக அர்ப்பணிப்பு கொண்டவருமான ஒரு ஆற்றல்மிக்க தலைவர் என்று பாஜக கருதுகிறது. மேலும், இவர் ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்தவர்.
ஜே.பி. நட்டா 2019-ம் ஆண்டு பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அமித் ஷாவின் தேசிய தலைவர் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், 2020 ஜனவரியில் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
Hindusthan Samachar / JANAKI RAM