இயக்குநர் மாரி செல்வராஜூக்கு பெரியார் விருது தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, 14 ஜனவரி (ஹி.ச) 2026 ஆம் ஆண்டிற்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 17ல் பெரியார் திடலில் நடைபெறும் பொங்கல் விழாவில் விருது
இயக்குநர் மாரி செல்வராஜூக்கு பெரியார் விருது தமிழக அரசு அறிவிப்பு


சென்னை, 14 ஜனவரி (ஹி.ச)

2026 ஆம் ஆண்டிற்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 17ல் பெரியார் திடலில் நடைபெறும் பொங்கல் விழாவில் விருதுகளை கி.வீரமணி வழங்கவுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருபப்தாவது,

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 32 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் கலை. இலக்கியம். அறிவியல், சமூகப்பணி, விளையாட்டு, சூழலியல்,தொழில், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெருமக்களுக்கு 'பெரியார் விருது' வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

அந்த வகையில் இருவருக்கு 2026 ஆம் ஆண்டுக்கான 'பெரியார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிச் சிந்தனையுடன் செயல்பட்டு தமது படைப்புகளால் பல்வேறு சமூக அவலங்களை வெளிப்படுத்தி வரும் எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்களுக்கும், தமது திரைப்படங்களால் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்து,

முற்போக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சாதனைகள் படைத்து வரும் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது.

இந்த விருது சென்னை பெரியார் திடலில் ஜனவரி 17 சனி மாலை 4 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள திராவிடர் திருநாள்- தமிழ்ப் பத்தாண்டு.

பொங்கல் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b