Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னையை அடுத்த கிளாம்பக்கத்தில் உள்ள கலைஞர் பேருந்து நிலையத்திலிருந்து ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்து தமிழ்நாடு அரசால் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்து இயக்கத்தினை நள்ளிரவில் சென்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை
சந்தித்த அவர்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த
ஊர்களுக்குச் சிரமமின்றிச் செல்வதற்காக கடந்த 9 ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம்
தேதி வரை தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள்
இயக்கப்படுகின்றன என்றும்
வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் சேர்த்து, இன்று மட்டும் 1,050
சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் ஒட்டுமொத்தமாக, சென்னையில் இருந்து 6 நாட்களில் 22,797 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 11,290 பேருந்துகள் என மொத்தம் 34,087 சிறப்பு பேருந்துகள்
இயக்கப் பட்டு உள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி,
செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், தஞ்சாவூர்,
புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்
இயக்கப்படுவதாகவும் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து வந்தவாசி, திருவண்ணாமலை, செஞ்சி பேருந்துகள்
இயக்கப்படுகிறது.
கடந்த ஒன்பதாம் தேதி முதல் 12 ஆம் தேதி நள்ளிரவு வரை சுமார் 4.88 லட்சம் மக்கள் அரசு சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்து உள்ளார்கள்.
இந்த நிலையில், முன்னதாக பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் பேருந்துகள் சரியான நேரத்தில் கிடைக்கிறதா என்றும் பயணிகளிடம் கேட்டு
அறிந்தார்.
மேலும் பயணிகளுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் சரியாக பேருந்துகளை இயக்க
வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் பேருந்துக்குள் ஏறி பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளிடமும் சரியான
நேரத்தில் இருக்கைகள் உடன் பேருந்து கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam