பொங்கல் தொடர் விடுமுறை எதிரொலி - கடும் போக்குவரத்து நெரிசல்
விழுப்புரம், 14 ஜனவரி (ஹி.ச.) தமிழர் திருநாளாம் உங்கள் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு ஐந்து நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. இதன் காரணமாக தலைந
போக்குவரத்து நெரிசல்


விழுப்புரம், 14 ஜனவரி (ஹி.ச.)

தமிழர் திருநாளாம் உங்கள் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு ஐந்து நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. இதன் காரணமாக தலைநகர் சென்னையில் உள்ள வெளி மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும்

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக விழுப்புரம்- விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மற்றும் பாப்பனம்பட்டு பகுதிகளில் கடுமையான

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

மேலும், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஏழு

வழித்தடங்களும் திறக்கப்பட்டு வாகனங்கள் விரைவாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் குறைந்த சிரமத்துடன் பயணம் மேற்கொள்ள முடிகிறது.

இதற்கிடையில், விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் முதல் விழுப்புரம் அரசூர்

வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஏழு இடங்களில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நடைபெறும் பகுதிகளில் பண்டிகை காலங்களில்

தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகி வருகிறது.

எனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக நடைபெற பாலம் கட்டும் பணிகளை

விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam