Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 14 ஜனவரி (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் , திருமண தகவல் தொழில் மையம் நடத்துபவருமான கார்த்திக் (51)தனது குடும்பத்தினருடன், பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ரஜினி கோயில் முன்பு தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், கிராமத்து பாணி போல குடில் அமைத்தும், ரஜினியின் கட் அவுட்-களை வைத்தும், பொங்கலுக்கு தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
வீடு முழுவதும் ரஜினியின் திருவுருவ படங்களை அமைக்கப்பட்டும், நவ தானியங்களால் படையப்பாவில் வரும் ரஜினி உருவத்தை படைத்தும்,காய் கனிகளை வைத்து ரஜினியின் படத்தை அலங்கரித்தும், விழாவை வெகு சிறப்பாக ரஜினி ரசிகர் குடும்பத்தினர் கொண்டாடினர்.
Hindusthan Samachar / Durai.J