Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 14 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் திருநாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார்.
பொங்கல் திருநாள், தைத் திருநாள் இந்த பொங்கல் திருநாள் நம்முடைய பாரம்பரியம்
போற்றும் பண்பாட்டுத் திருவிழா கலாச்சாரம் காக்கும் உன்னத திருவிழா எனக்கூறி,
அனைவருக்கும் தனது பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
ஒவ்வொரு தனிநபரும், ஒவ்வொரு குடும்பமும் எல்லா உரிமைகளையும், எல்லா
நலன்களையும் பெற்று நலமோடு வாழ வேண்டும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் மனநிறைவோடு வாழ வேண்டும் வறுமையற்று வளர்ச்சியும் வளமும் பெற்று வாழ வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் மருத்துவர் ஐயா சார்பிலும் நெஞ்சார்ந்த பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக ஜி.கே.மணி கூறினார் .
தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி குறித்து எப்போது அறிவிப்பார் என்ற கேள்விக்கு பதிலளித்தவர், விருப்ப மனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு நாளையோ, நாளை மறுநாளோ கட்டாயம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஐயாதான் ஆணிவேர், ஐயாவே ஆலமரம்”. ‘எல்லாப் புகழும் மருத்துவர் ஐயாவுக்கு’ அப்படின்னு சொல்றோம் ஏற்கனவே தர்மபுரியில ஐயாதான் ஆணிவேர்ங்கறத நாங்க நிரூபிச்சுக் காட்டினோம்.
சேலத்துல ஐயாவே ஆலமரம்னு சொன்னோம். இப்ப பொங்கல் விழால பாருங்க, ஆலமரத்த
வச்சு ஐயாதான் எல்லாத்துக்கும் காரணம், அதனால ‘ஐயாவே ஆலமரம்’ என்ற அடிப்படையில் இப்ப பொங்கல் ஐயாவ மையப்படுத்தித்தான் பொங்கல் வைக்கிறோம் என்றார்.
திருமாவளவன் பாமக, பாஜக கூட கூட்டணி செல்ல எதிர்ப்பு என்ற கேள்விக்கு, இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் பல்வேறு கோணங்களில் பல்வேறு விதமா பேசிக்கொண்டு
இருந்தாலும் கூட, எந்தக் கட்சி யாரோடு கூட்டணி சேரும் என்பது இன்னும் இறுதி முடிவாகவில்லை என்றார்.
Hindusthan Samachar / GOKILA arumugam