ஹெல்தி பொங்கல் 2026 -சுவை மட்டுமல்ல,ஆரோக்கியமும் அள்ளித் தரும் பொங்கல்!
சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.) கோவிலில் தரப்படும் பிரசாதம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் சர்க்கரை பொங்கல் என்றால் சொல்லவா வேண்டும். ஒருசிலர் கோவிலில் தரப்படும் சர்க்கரை பொங்கலை சாப்பிடுவதற்காகவ
Pongal


சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.)

கோவிலில் தரப்படும் பிரசாதம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதிலும் சர்க்கரை பொங்கல் என்றால் சொல்லவா வேண்டும். ஒருசிலர் கோவிலில் தரப்படும் சர்க்கரை பொங்கலை சாப்பிடுவதற்காகவே கோவிலுக்கு வருவார்கள். அது என்னவோ கோவிலில் தயாரிக்கப்படும் சர்க்கரை பொங்கலுக்கு என்றே ஒரு தனிச்சுவை உள்ளது என்றே சொல்லாம்.

ஆண்டில் கொண்டாடப்படும் முதல் பண்டிகையாகவும், மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகவும் இருப்பது பொங்கல் பண்டிகை தான். பொங்கல் பண்டிகை என்றாலும் சர்க்கரை பொங்கல், கரும்பு தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். பொங்கல் பண்டிகையின் முக்கிய சடங்காக பின்பற்றப்படுவது சர்க்கரை பொங்கல் வைப்பது தான்.

இதன்படி தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

பொதுவாகவே பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலும் வெண்பொங்கலும் செய்வது வழக்கம் தான். என்னதான் வீட்டில் பொங்கல் செய்தாலும் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலின் சுவைக்கு பல ரசிகர்கள் உண்டு.

அதனால் இந்த பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக இன்னும் சுவையான கோவில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலை வீட்டிலிருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள்.. ரசித்து சாப்பிடுவார்கள்! அப்படி கோவிலில் கொடுக்கப்படும் பொங்கலில் என்ன வித்தியாசமாக சேர்க்கிறார்கள்.

எந்த பொங்கல் செய்யும்போதும் தண்ணீரில் சிறிது நெய் அல்லது டால்டா விட்டு அரிசியை கைளைந்து சிறிது ஊறிய பின் போட்டால் பொங்கல் ஒரு துளி கூட பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.

பொங்கல் இறக்கும்போது ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்துக்கிளறி இறங்கினால் மணமாக இருக்கும்.

சர்க்கரை பொங்கலில் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கியோ, நெய்யில் வதக்கிச் சேர்த்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். முந்திரி பருப்பு அதிகமாக சேர்க்கத் தேவையில்லை.

சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருக்க வெல்லப்பாகை கெட்டியாக காய்ச்சி, பிறகு அதை குழைந்த சாதம் மற்றும் பயத்தம் பருப்பு கலவையுடன் சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றினால் நல்ல மணமாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல் -

சர்க்கரைப் பொங்கல் வேகும்போது ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றினால் பொங்கல் மணமாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

சர்க்கரைப் பொங்கலை இறக்கியதும் கொஞ்சம் மில்க்மெய்டு ஊற்றினால் சுவை அபாரமாக இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல் சூடாக இருக்கும் போதே அரை கப் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

வெல்லப் பொங்கல் செய்யும்போது ஒரு டம்ளர் கரும்புச்சாறும், இரண்டு மஞ்சள் வாழைப்பழத்தையும் மசித்து சேர்த்துக் கொண்டால் வெல்லப் பொங்கலின் சுவை அதிகரிக்கும்.

சர்க்கரை பொங்கல் செய்யும் போது நன்கு கனிந்த பலாச்சுளைகளை பாலில் அரைத்துப் போட்டு செய்தால் பொங்கல் அமிர்தமாக இருக்கும்.

சர்க்கரை பொங்கலுக்கு கொப்பரை தேங்காயைத் துருவி, திராட்சை, முந்திரியை அரைத்துப் போட்டு ஏலக்காய் தூள் கலந்து செய்தால் வாசனை அதிகமாக இருக்கும்.

சர்க்கரைப் பொங்கலுக்கு சிறிதளவு கெட்டித் தயிர் சேர்த்து செய்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

அறுவடைத் திருநாளான சங்கராந்தி கர்நாடகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, தமிழ்நாடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டு கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளின் சிறப்பு உணவு பொங்கல். அதனால் உங்களுக்காக இனிப்பு பொங்கல் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1 கப்

அரிசி – 1 கப்

பொடியாக்கிய வெல்லம் / சர்க்கரை – 1 கப்

ஏலக்காய் – 4

உலர் திராட்சை, முந்திரி – 50 கிராம்

நெய் – 4 கரண்டி

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் பாசிப்பருப்பை போட்டு, மிதமான தீயில் சிவக்கும்வரை வறுக்கவும்.

குக்கரில் கழுவிய அரிசி மற்றும் வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

மற்றொரு பாத்திரத்தில் பொடியாக்கிய வெல்லத்தை சேர்த்து கரைக்கவும். (வெல்லத்தில் அழுக்கு இருந்தால் வடிகட்டிக் கொள்ளவும்)

இப்போது வேக வைத்த அரிசி–பருப்பு கலவையில் வெல்லப் பாகை சேர்த்து நன்றாக கிளறவும்.

பின்னர் பொடியாக்கிய ஏலக்காய், நெயில் வறுத்த உலர் திராட்சை மற்றும் முந்திரியை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

விருப்பப்பட்டால் சிறிதளவு பச்சைக் கற்பூரம் மற்றும் ஒரு சிட்டிகை கிராம்பு பொடியையும் சேர்க்கலாம்.

Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV