Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 14 ஜனவரி (ஹி.ச.)
பொங்கல் பண்டிகையானது நாளைய தினம் உலகத் தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்காசியில் வாழைத்தார் மற்றும் வாழை இலைகளின் விலையானது தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக, 200 எண்ணம் கொண்ட ஒரு வாழை இலை கட்டானது ரூ.1600க்கும், ஒரு தார் செவ்வாழை ரூ.1600 முதல் ரூ.1800 வரையும் தரத்திற்கு ஏற்ப விற்பனையாகி வருகிறது.
அதேபோல், நாட்டு வாழைத்தார் ரூ.800க்கும், கோழிக்கோடு வாழைத்தார் ரூ.700க்கும், ரசக்கசளி வாழை ரூ.500க்கும், கற்பகவல்லி வாழை ரூ.750க்கும், நாட்டு வாழைத்தார் ரூ.800க்கும், சக்கை வாழை ரூ.800 க்கும் விற்பனையாகி வரும் நிலையில், இன்னும் வாழைப்பழம் மற்றும் வாழை இலைகளின் விலையானது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, தற்போது பனி பொழிவு காலம் என்பதால் வாழை இலை மற்றும் வாழை தார்களின் விளைச்சல் என்பது குறைந்து காணப்படுவதால் தற்போது தென்காசி மாவட்டத்திற்கு மதுரை, தேனி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வாழைத்தார்கள் மற்றும் வாழை இலையானது கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இந்த விலையேற்றம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN