Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 14 ஜனவரி (ஹி.ச.)
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் 4 வருடத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் புலிகள் கணக்கெடுக்கும் பணியானது தென்காசி மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது.
தென்காசி மாவட்ட வனத்துறையினர் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த புலிகள் கணக்கெடுக்கும் பணியில் ஏராளமான வனத்துறையினர் பங்கேற்று குழுக்களாக பிரிந்து வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணியை நடத்தினர்.
இந்த கணக்கெடுக்கும் பணியின் போது, புலிகளின் கால் தடம், எச்சம் மற்றும் நேரில் பார்த்தல் உள்ளிட்டவைகளை வைத்து கணக்கெடுக்கும் பணியானது நடைபெற்ற நிலையில் 7 நாட்கள் நடைபெற்ற இந்த கணக்கெடுக்கும் பணியானது தற்போது நிறைவடைந்துள்ளது.
குறிப்பாக, இந்த கணக்கெடுக்கும் பணியின் போது, ஏராளமான புலிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளை வசிப்பிடமாக கொண்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக கால் தடங்கல் மற்றும் எச்சங்கள், புலியை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கேமராக்கள் வைக்கப்பட்டு 40 நாட்களுக்குப் பிறகு அதனை புகைப்படமாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தில் சமர்ப்பிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN