Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 14 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் பொங்கல் பண்டிகையாகவும் சில இடங்களில் மகர சங்கராந்தியும் கொண்டாடப்பட்டு வருகிறது. சில வட மாநிலங்களிலும் பல்வேறு வகையான சிறப்புப் பெயர்களில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவில் பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
போகி கொண்டாட்டத்தின் முக்கிய ஒரு பகுதியாக வீட்டிலிருந்த பழைய பொருட்கள், தேவை இல்லாத பொருட்கள் ஆகியவற்றை குவித்து மக்கள் தீயிட்டு கொளுத்துகின்றனர்.
இதேபோல், திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் இன்று அதிகாலை போகி கொண்டாட்டம் விமர்சையாக நடைபெற்றது. அப்போது ஏழுமலையான் கோவில் முன் விறகுகள் குவித்து வைக்கப்பட்ட நிலையில் அதன்
மீது கற்பூரத்தை வைத்து ஏழுமலையான் கோவில் அதிகாரிகள் தீ வைத்து போகி
கொண்டாடினர்.
இதேபோன்று வைபவ உற்சவம் மண்டபம் எதிரில் போகி தீயிட்டு கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வேண்டும் என வேண்டி கொண்டனர். இதனையடுத்து நித்ய பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் முழுவதும் போகி தீ யிட்டதால் அதிகாலையில் இருந்தே புகை மூட்டம் சூழந்து சாலைகள் காணப்பட்டது.
இதனால் காலையில் அலுவலக பணி மற்றும் இதர பணிகளுக்காக வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam