Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 14 ஜனவரி (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நடந்த வார சந்தைக்கு காட்டுசெல்லூர், வடகுரும்பூர், கிளியூர், சேந்தநாடு, ஆசனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
வழக்கமாக இந்த சந்தையில் சுமார் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடைபெறும் பொங்கல் மற்றும் போகி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.
அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள், ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்.
8000 முதல் 25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையான நிலையில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு நடைபெற்ற ஆட்டு சந்தையில் 4 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN