ஜனவரி 16 ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு
புதுச்சேரி, 14 ஜனவரி (ஹி.ச.) புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாட பொதுமக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை (வியாழ
ஜனவரி 16 ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட  உத்தரவு


புதுச்சேரி, 14 ஜனவரி (ஹி.ச.)

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாட பொதுமக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை (வியாழன் முதல் ஞாயிறு வரை) 4 நாட்கள் தொடர் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டு இருந்தது.

மேலும், இன்றைய தினம் போகியை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 31-ந்தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான திருவள்ளுவர் தினத்தையொட்டி, வரும்

16-ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட புதுவை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b