Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 14 ஜனவரி (ஹி.ச.)
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தப் பொங்கல் திருநாளில் மண்பானை, செங்கரும்பு என வெவ்வேறு சிறப்புகள் இருந்து வந்தாலும் மண் பானைகளுக்கு கட்டப்படும் இஞ்சி கொத்து மற்றும் மஞ்சள் கொத்து உள்ளிட்டவைகளும் சிறப்பானதாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளான திருப்பனந்தாள், வீராகண், கடம்பங்குடி, திருவாய்ப்பாடி, அய்யாநல்லூர், பந்தநல்லூர், கதிராமங்கலம், ஆடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இந்த அறுவடை பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில்,
இஞ்சி மஞ்சள் உள்ளிட்ட விவசாய பணிகள் மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்கள் இருந்து வருகின்றது. தற்போது தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் இனிவரும் காலங்களில் செங்கரும்பு வழங்குவது போல் ஆரோக்கியத்தை செல்வத்தை பெருக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும்.
இஞ்சி, மஞ்சள் கொத்து வகைகளையும் சேர்த்து வழங்க வேண்டும்.
இதனை நேரடியாக விவசாயிகளிடமிருந்து உரிய விலைக்கு அரசு கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக பயிரிடப்படும் இஞ்சி, மஞ்சள் பயிர்களுக்கு அரசு முக்கியத்துவம் வழங்க வேண்டும்
என கோரிக்கை வைத்தனர்.
தஞ்சை சிவகங்கை பூங்கா, கீழவாசல், நாஞ்சிக்கோட்டை சாலை, ஈபி காலனி, பழைய பஸ் நிலையம், காமராஜர் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஞ்சி, மஞ்சள் கொத்து போன்றவை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஜோடி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b