Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)
பண்டிகை தினங்களில், நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் வெளியே திரண்டிருக்கும் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்தவகையில், பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு இன்று (ஜனவரி 15) காலை முதலே ரசிகர்கள் ஏராளமானோர் கூடினர்.
தனது வீட்டின் முன்பாக திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து வாழ்த்து கூறினார். இன்று காலை தனது வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், வீட்டின் வெளியே காத்திருந்த ரசிகர்களைப் பார்த்து கைகளை அசைத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:
அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்.
முக்கியமாக விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோசமாக, மகிழ்ச்சியாக இருந்தால்தான் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் படம் ஏப்ரலில் தொடங்குகிறது. அது கமர்சியல், எண்டர்டெயின்மெண்ட் படம், நன்றி.
இவ்வாறு நடிகர் ரஜினி கூறினார்.
Hindusthan Samachar / vidya.b