Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)
திமுக பொறியாளர் அணி நிர்வாகி உள்ளிட்ட மூவர் கைத்துப்பாக்கி விற்பனையில் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக சார்பில் எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ள பதிவில்,
அதுவும், இவர்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக துப்பாக்கி விற்பனை செய்ததாக செய்திகள் வருகின்றன.
அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில்,
கூலிப்படை Network,
போதைப்பொருள் Network,
தற்போது துப்பாக்கி Network
என இவை அனைத்தையும் வளர விட்டிருப்பது யார்? இன்றைய Failure Model திமுக முதல்வர் தானே?
துப்பாக்கி கலாச்சாரம் என்பதெல்லாம் தமிழ்நாடு இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று. அதுவும், இன்ஸ்டாகிராம் வாயிலாக ஏதோ புடவை விற்பது போல Assault-ஆக துப்பாக்கி விற்கும் அளவிற்கு எங்கிருந்து இவர்களுக்கு தைரியம் வருகிறது?
இதுபோன்ற செய்திகள் எல்லாம், இந்த திமுக ஆட்சியில் மக்கள் எப்படி நிம்மதியாக நடமாட முடியும்? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
உலக நாடுகளுடன் தான் நமக்கு இனிமேல் போட்டி என்று ஒரு திமுக அமைச்சர் சொன்னாரே- எதில்? Crime Nexus, Gun Network, Drug Mafia... இதில் தானே?
அதிலும் சகல நெட்வர்க்கிலும் உச்சியில் நின்று ஆட்டிப் படைப்பது திமுக-வினர் தான் என்பது தான் இதில் Highlight...!!
மக்களின் உயிரைப் பற்றி, அவர்களின் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல், துப்பாக்கி கலாச்சாரத்தை வளர வைத்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
கைது செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகி உட்பட, குற்றத்தில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
இன்னும் 3 மாதங்களில் அமையவுள்ள அதிமுக ஆட்சியின் முதல் பணியாக, சட்டம் ஒழுங்கைக் காக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை தமிழக மக்களுக்கு அளிக்கிறோம்.
மக்களைக் காப்பதே அரசின் முதல் கடமை என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ