Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 15 ஜனவரி (ஹி.ச.)
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று ஜனவரி 15, 2026 தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
போட்டியில் பங்கேற்பதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்த சுமார் 1,800-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
முதலில் காவல்துறையினர் வீரர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து, பின்னர் அவர்களை மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்கின்றனர். அங்கு வீரர்களுக்கு இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் உடல் தகுதி உள்ளிட்ட பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, வீரர்கள் மது அருந்தியுள்ளனரா என்பதை அறிய ஆல்கஹால் பரிசோதனையும் நடத்தப்படுகிறது.
அனைத்து சோதனைகளிலும் தேர்ச்சி பெறும் வீரர்கள் மட்டுமே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். தகுதி பெற்ற வீரர்கள் தற்போது காத்திருப்புப் பகுதியில் தயார் நிலையில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், போட்டியில் பங்கேற்கும் 3,000-க்கும் மேற்பட்ட காளைகளுக்கும் கால்நடை மருத்துவக் குழுவினர் தகுதிச் சான்றிதழ்களைச் சரிபார்த்து அனுமதி வழங்கி வருகின்றனர்.
பாதுகாப்புப் பணியில்
2,200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam