ஜனவரி 19 ஆம் தேதி முதல் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி
செங்கல்பட்டு, 15 ஜனவரி (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கத்தில், இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேசிய தேனீ வாரிய நிதியுதவியுடன், ஜனவரி 19 ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை, ஏழு வேலை நாட்கள் என, ஒரு வார தேனீ வளர்ப்பு
ஜனவரி  19 ஆம் தேதி முதல் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி


செங்கல்பட்டு, 15 ஜனவரி (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கத்தில், இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேசிய தேனீ வாரிய நிதியுதவியுடன், ஜனவரி 19 ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை, ஏழு வேலை நாட்கள் என, ஒரு வார தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி முகாமில், தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், தேனீ இனங்களை கண்டறிதல், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் வளர்த்தல், தேன் எடுக்கும் முறை, தேனீயின் தரம் அறிதல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாமில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என வேளாண் அறிவியல் நிலையம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b