Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 15 ஜனவரி (ஹி.ச.)
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானி-சாகர் அணையானது 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டதாகும். அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில், மழை தீவிரமடைந்ததன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் மளமளவென உயர்ந்து டிசம்பர் 21ஆம் தேதி 102 அடியை எட்டியது. தொடர்ந்து பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பவானி-சாகர் அணைக்கு நீர்வரத்து கடந்த ஜனவரி 13 ஆம் தேதி , 4,900 கனஅடியாக இருந்தது. இந்த நிலையில், நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து, 3,029 கன அடியாக குறைந்து இருந்தது.
அணையிலிருந்து உபரிநீர், 900 கன அடி; பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில், 2000 கன அடி, அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்காலில், 100 கன அடி தண்ணீர் என மொத்தம், 3,000 கன அடி நீர் தற்போது வெளியேற்றப்படுகிறது.
அதாவது அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியாகவும் நீர் இருப்பு 30.3 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரும், வெளியேற்றப்படும் நீரும் ஒரே அளவும் ஒன்றாக இருப்பதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து, 9வது நாளாக, 102 அடியில் நீடிக்கிறது.
Hindusthan Samachar / vidya.b