Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 ஜனவரி (ஹி.ச.)
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் சில குறிப்பிட்ட மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கு கடந்த 2022-ம் ஆண்டு முதல் முதுகலை க்யூட் தேர்வின் மூலம் சேர்க்கை நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமை (NTA) இத்தேர்வு நடத்தப்படுகிறது.
2026-27 கல்வி ஆண்டிற்கான க்யூட் தேர்வு கணினி வழியில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இணையதள விண்ணப்பப் பதிவு டிசம்பர் 14ம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 14 ) நிறைவு பெற்றது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜனவரி 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் https://exams.nta.ac.in/CUET-PG/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜனவரி 23 முதல் 25ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு, கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பதில் ஏதும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியே தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகாமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b