உருளைக்கிழங்குகளுக்கு இடையே கிலோ கணக்கில் கஞ்சா கடத்தல் -742 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.) கடந்த 13 ம் தேதி மதுரை அருகே ஒரு ஈச்சர் லாரியை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை செய்ததில், உருளைக்கிழங்கு நிரப்பப்பட்ட சணல் பைகளில் கிலோக்கண்கக்கில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. சோதனையில் அவை 742 கில
Kanja


சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.)

கடந்த 13 ம் தேதி மதுரை அருகே ஒரு ஈச்சர் லாரியை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை செய்ததில், உருளைக்கிழங்கு நிரப்பப்பட்ட சணல் பைகளில் கிலோக்கண்கக்கில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

சோதனையில் அவை 742 கிலோ என தெரியவந்து அவை கஞ்சா மீட்கப்பட்டது.

இதில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் ஒடிசாவின் பிரம்மபூரில் இருந்து கடத்தப்பட்டு வருவதும், அவை மதுரை வழியாக இலங்கைக்கு கொண்டு சொல்லப்படுவதும் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபர்கள், மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் நாடுகடந்த கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு பெரிய கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ