Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 15 ஜனவரி (ஹி.ச.)
தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.
போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் நிலையில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பூ மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கோவை மாநகர மாவட்ட அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு ஜாதி மதம் வேறுபாடு இன்றி தமிழர் பாரம்பரிய உடைகளான வேட்டி,சேலை அணிந்த உற்சாகமாக பொங்கல் பண்டிகையை அனைத்து மலர் வியாபாரிகள் இணைந்து பொங்கல் விழாவினை கொண்டாடினர்.
பொங்கல் விழாவில் அனைத்து மலர் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் அன்சாரி, பொருளாளர் சண்முகசுந்தரம், இணைச் செயலாளர் சுவாமி தங்கம், துணை செயலாளர் உஸ்மான், துணைத் தலைவர் முகமது அலி, துணை செயலாளர் அருண் சங்கர், துணைத் தலைவர் கோட்டை ஹக்கீம் , அன்வர் அரளி, வேலு மற்றும் மாமன்ற உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN