Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 15 ஜனவரி (ஹி.ச.)
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட கடலுண்டி பகுதியில்
அமைந்துள்ள ஒரு கோவிலில் திருவிழாவிற்காக பாலு சேரி கஜேந்திரன் என்ற யானை
வரவழைக்கப்பட்டது.
திருவிழாவிற்கு முன்னதாக யானைக்கு அலங்காரம் செய்யப்பட்டு
தயார் நிலையில் செய்யப்பட்டது.
இந்த நிலையில் திடீரென அந்த யானை மயங்கி
விழுந்து கீழே விழுந்தது, இதனைக் கண்ட பாகன் உடனடியாக கால்நடை மருத்துவக்
குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுவினர் யானையை பரிசோதனை செய்த போது இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்தக் காட்சிகள் கோவிலில்
பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான நிலையில் தற்போது வெளியாகி அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
கோவில் திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்ட யானை திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இது போன்ற சம்பவங்கள், யானைகளை திருவிழாக்களில் பயன்படுத்துவதால் ஏற்படும் மன அழுத்தம், முறையற்ற பராமரிப்பு மற்றும் சத்தம் போன்ற காரணங்களால் அடிக்கடி நிகழ்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam